Iconprzuu Page
8 months, 1 week ago
13 messages
#அரியர்ஸ்  #இன்ஜினியரிங் #மாணவர்கள் #பட்டம்
2 months, 3 weeks ago via Uploader; 1 attachments; 28 views
1-24390-15013755612390-images3.jpg
Rotate leftDownloadRotate right
பட்டம் முடித்து 3 ஆண்டிற்குள்ளாக அனைத்து அரியர் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பொறியியல் பட்டம் பெற முடியும் என்ற புதிய விதி விரைவில் அமலாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான உத்தரவை உயர்கல்வித் துறை விரைவில் பிறப்பிக்க முடிவு செய்துள்ளது. 2011-ம் ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் பொறியியல் படிப்பில் சேர்ந்தவர்கள் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள செமஸ்டர் தேர்வில், அனைத்து அரியர் பாடங்களையும் எழுதி தேர்ச்சி பெற வேண்டும். அப்படி தேர்ச்சி பெறாவிட்டால், அடுத்து வரும் தேர்வுகளில் தேர்வு எழுத அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அரியர் உள்ளவர்கள் 7 ஆண்டுகள் வரை தேர்வு எழுதலாம் என்ற தற்போதைய நடைமுறை நீக்கப்பட்டால், பொறியியல் பட்டம் பெறுவது மாணவர்களுக்கு கடினமாகி விடும் என்கின்றனர் கல்வியாளர்கள். தொடர்ந்து 7 ஆண்டுகளுக்கு பொறியியல் படிப்பை முடிக்காமல் அரியர் தேர்வுகளை எழுதி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக, உயர்கல்வித் துறை விரைவில் புதிய உத்தரவை பிறப்பிக்க உள்ளதாக அண்ணா பல்கலைகழக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

மேலும் அரியர் மாணவர்களுக்கென தனியாக 6,000-க்கும் மேற்பட்ட வினாதாள்கள் தயார் செய்வதால் கால விரயமாவதாகவும், மதிப்பீட்டிலும் கால தாமதம் ஏற்படுவதாகவும் பல்கலைகழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேற்கண்ட புதிய விதி அமல்படுத்தப்பட்டால் சுமார் 1,800 வினாத் தாள்கள் மட்டுமே தயாரிக்கும் பணி இருக்கும் என்றும் கூறப்படுகிறது. முதலாம் ஆண்டு சேரும் மாணவர்களுக்கு பொறியியல் படிப்பு குறித்த முறையான ஆலோசனையை தனியார் கல்லூரிகள் வழங்குவதில்லை என்பதும் பல்வேறு தரப்பினரின் புகாராகும்.

Latest